நியூயார்க் லாகார்டியா விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு டெல்டா ஏர்லைன்ஸ் வர்த்தக விமானங்கள் மோதியது. இதில் ஒரு விமானத்தின் இறக்கை துண்டிக்கப்பட்டது.
இந்த விபத்து உள்ளூர் நேரப்படி இரவு 9:56 மணியளவில் நடந்தது எனவும் இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் வீடியோவுகள் பரவி வருகின்றன. அந்தக் காணொளி பக்கத்திலிருந்த விமானத்தின் உள் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது.