மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மகராஜா யஷ்வந்த்ராவ் என்ற அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக 2 குழந்தைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள குழந்தை ஒன்றின் விரல்களையும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள் பகுதியையும் எலிகள் கடித்து உள்ளன. அவற்றில் ஒரு குழந்தை கார்கோன் மாவட்டத்தில் யாருமற்ற நிலையில் கைவிடப்பட்டு கிடந்துள்ளது. அதனை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரிக்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், இந்த சம்பவம் பற்றி நீதிமன்ற விசாரணை வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.