2 கொம்புகள் கொண்ட அதிசய மனிதன்

447
Advertisement

2 கொம்புகள் கொண்ட அதிசய மனிதனின் வீடியோ இணையத்தில் வைரலாகத்தொடங்கியுள்ளது.


பலருக்குத் தங்கள் உடம்பில் பச்சைக் குத்திக்கொள்வது மிகவும் விருப்பமான ஒன்றாக உள்ளது. ஆனால், ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவருக்கு அதுவே முழுநேர வாழ்க்கையாகியுள்ளது.


தகவல் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வரும் அவர் தனது 40 ஆவது வயதில் உடம்பில் பச்சைக் குத்திக்கொள்ளத் தொடங்கினார். அது அவருக்குப் பிடித்துப்போகவே, அதில் சாதனை நிகழ்த்த முடிவுசெய்தார்.

தற்போது 62 வயதான புச்சோல்ஸ் என்னும் அந்த முதியவர் தனது உடம்பில் 516 மாற்றங்களைக்கொண்ட உலகின் அதிக துளையிடப்பட்ட கின்னஸ் சாதனை மனிதராகியுள்ளார்.


விலங்குபோல் 2 கொம்புகளை அமைத்துள்ள அந்த முதியவர் தனது உடல் முழுவதும் பச்சைக் குத்தியுள்ளார். அத்துடன் கண்ணிமைகள், மூக்கு, உதடுகள், காதுகள், முகத்தாடை ஆகியவற்றில் துளையிட்டு குன்றிமணி அளவுள்ள காந்தங்களைப் பொருத்தியுள்ளார்.


2014 ஆம் ஆண்டில் துபாய் விமான நிலையத்தில் அவரது தோற்றம்காரணமாக ஊடக வெளிச்சத்துக்கு வந்த புச்சோல்ஸ் இப்போது உலகத்தின் கவனத்தையே ஈர்க்கத் தொடங்கியுள்ளார்.