வேலைவாய்ப்பு : பஞ்சாப், சிந்து வங்கியில் 190 காலிப்பணியிடங்கள்

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி 190 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கிரெடிட் மேனேஜர் மற்றும் வேளாண் மேனேஜர் பதவிகளுக்கான இந்த பணியிடங்கள் பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ளன.

கிரெடிட் மேனேஜர் பதவியில் 130 மற்றும் வேளாண் மேனேஜர் பதவியில் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் எஸ்சி – 28, எஸ்டி – 13, ஒபிசி – 51, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 19, பொதுப்பிரிவு – 79 மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அறிவிப்பு வெளியான 01.09.2025 தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது 23 முதல் 35 வரையிலும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஒபிசிக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு தளர்வு உண்டு.

கல்வித் தகுதி:

  • கிரெடிட் மேனேஜர்: பட்டபடிப்பு (60% மதிப்பெண்) அல்லது CA/CMA/CFA/MBA பட்டதாரிகள். குறைந்தது 3 ஆண்டு அனுபவம்.
  • வேளாண் மேனேஜர்: விவசாயம், தோட்டக்கலை, டெய்ரி, கால்நடை அறிவியல், வேளாண் பொறியியல் போன்ற துறைகளில் இளநிலை பட்டபடிப்பு (60%, ஒபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 55%) மற்றும் 3 ஆண்டு அனுபவம்.

தேர்வு நடைமுறை:

  • சம்பளம் மாதம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படுகிறது.
  • எழுத்துத் தேர்வு (ஆங்கிலம், பொதுத் தகவல், பணித் திறன்) – 100 கேள்விகள்
  • எழுத்துத் தேர்வில் பொதுப்பிரிவினர் 40%, மற்ற பிரிவினர்கள் 35% மதிப்பெண்கள் பெற வேண்டும்.
  • தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
  • எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://punjabandsind.bank.in/ என்பதில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவிற்கு ரூ.850 மற்றும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100 ஆம் இருக்கிறது. கட்டணம் ஆன்லைனில் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பவர் அக்டோபர் 10-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Related News

Latest News