Tuesday, April 29, 2025

19 வயசு இளம்வீரர் ‘Entry’ தோனியின் ‘இடம்’ இவருக்கா?

தொடர் தோல்விகளால் சோகத்தில் ஆழ்ந்தாலும், அதில் இருந்து மீண்டுவரும் வழிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் மேற்கொண்டு வருகிறது. அடுத்த வருடம் Comeback கொடுப்பதற்காக, இப்பொழுது இருந்தே பிளேயிங் லெவனை கட்டமைத்து வருகின்றனர்.

தோனிக்கு பிறகு அவருக்கு மாற்று என்று சொல்லும்படியான விக்கெட் கீப்பர் யாரும் அணியில் இல்லை. இந்த குறையை போக்குவதற்காக, ராஜஸ்தானை சேர்ந்த 19 வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், கார்த்திக் சர்மாவை அணிக்குள் கொண்டு வந்துள்ளனர்.

நடப்பு சீசனில் ஆயுஷ் மாத்ரே, நூர் அஹமது, டெவால்ட் ப்ரேவிஸ், ஷேக் ரஷீத் என்று ஏகப்பட்ட இளம்வீரர்களுக்கு, அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்துள்ளது. அந்த வகையில் கார்த்திக் சர்மாவும் CSKவில் இணைந்துள்ளார்.

கடைசி சில போட்டிகளில் தோனிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, அவருக்கு பதிலாக கார்த்திக் சர்மாவை ஆடவைக்கலாம் என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். அறிமுக ரஞ்சி தொடரில் 113 ரன்கள், 2024-25 விஜய் ஹசாரே தொடரில் 26 சிக்ஸர்கள் என்று, கார்த்திக் முரட்டுத்தனமான பார்மில் இருக்கிறார்.

வரலாற்றில் முதன்முறையாக மஞ்சள் அணியில், பல்வேறு மாயாஜாலங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் அடுத்து வரும் ஆட்டங்களில் CSKவின் இளம்படை, எதிரணி வீரர்களை நிலைகுலையச் செய்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

Latest news