Tuesday, April 22, 2025

டெல்லியில் அதிர்ச்சி சம்பவம் : கூட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி

உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்க டெல்லியில் நேற்று இரவு ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் 29 ஆம் தேதி கும்பமேளாவில் எற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியான நிலையில் தற்போது டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 18 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest news