Tuesday, May 13, 2025

டெல்லியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை

வடகிழக்கு டெல்லி, சீலம்பூரில் நேற்று மாலை 17 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

நியூ சீலம்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்த அந்த சிறுவனை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கினர். இதையடுத்து அந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து சீலம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news