Friday, December 27, 2024

கிட்னிக்கு மூணு கோடியா? இளம்பெண்ணுக்கு காத்திருந்த Twist!

ஹைதராபாதை சேர்ந்த 16 வயது செவிலியர் படிப்பு பயிலும் மாணவி, தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து எடுத்த 2 லட்சத்தை திருப்பி செலுத்துவதற்காக தனது கிட்னியை விற்க முயன்றுள்ளார்.

கிட்னிக்கு மூன்று கோடி வரை தருவதாக கூறிய மர்ம கும்பல், வரியாக 16 லட்சம் செலுத்த கூறியுள்ளனர். சமூகவலைதளம் வழியே பிரவீன் ராஜ் என்ற நபர் பின்னர் இரண்டு தவணையில் முழுப் பணத்தையும் செலுத்துவதாக உறுதி அளித்துள்ளார்.

இதை நம்பி 16 லட்சத்தை கட்டிய பெண்ணிடம், பணத்தை குறிப்பிட்ட விலாசத்தில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு மோசடி பேர்வழிகள் கூறியுள்ளனர்.

அங்கு சென்ற பின் போலியான விலாசத்தை பார்த்து தான் ஏமாந்து விட்டதை அந்தப் பெண் உணர்ந்த நிலையில், தன் கணக்கில் குறையும் 2 லட்சத்தை தந்தை கண்டுபிடிக்க, தங்கியிருந்த விடுதியை விட்டும் வெளியேறியுள்ளார்.

தந்தை அளித்த புகாரின் பேரில், போலீஸ் விசாரணையை தொடங்கி பெண்ணை கண்டுபிடித்ததோடு, சைபர் கொள்ளை கும்பலை தேடி வருகிறது.

Latest news