16.09.2026;தங்கம் விலையில் இன்று திடீர் மாற்றம்… விலை நிலவரம் இதோ

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 12-ந்தேதி சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,170-க்கும் விற்பனையானது. 13-ந்தேதி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து 14-ந்தேதி சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,125-க்கும் விற்பனையானது.

நேற்று தங்கம் விலை மேலும் சரிந்தது. சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும், ஒரு கிராம் ரூ.14,040-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் ரூ.1,12,520-க்கும், ஒரு கிராம் ரூ.14,065-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி பார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்துக்கு மத்தியில், இன்று மீண்டும் விலை சற்று உயர்ந்துள்ளது.

Related News

Latest News