லிபியா நாட்டின் டோப்ரூக் நகருக்கு அருகே புலம்பெயர் தொழிலாளர்களுடன் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த 15 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய படகில் பயணித்தார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.