மனைவியைக் கருவுறச்செய்ய கணவருக்கு 15 நாள்
பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளை
இந்த உத்தரவை வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு
பில்வாரா நீதிமன்றம் நந்த லாலா என்பவருக்கு
ஆயுள்தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
34 வயதாகும் நந்த லாலா அஜ்மீர் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நந்த லாலாவின் மனைவி ரேகா
தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள உரிமை உள்ள
தாகவும், அதன் அடிப்படையில் கணவரை விடுதலை
செய்ய வேண்டும் என்றும்கூறி ஜோத்பூர் உயர்நீதி
மன்றத்தில் சமீபத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சந்தீப் மேத்தா, ஃபர்ஜந்த்
அலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
விசாரணையின் முடிவில், நந்த லாலாவின் மனைவி
அப்பாவி. கணவர் சிறையில் இருப்பதால் அவரின்
பாலியல் மற்றும் உணர்வுப் பூர்வமான தேவைகள்
பாதிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கருத்துத்
தெரிவித்துள்ளனர்.
மேலும், எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அசாதாரணச்
சூழல் ஒவ்வொரு வழக்கையும் கருத்தில்கொண்டு
பார்க்கும்போது குழந்தை பெற்றுக்கொள்வதற்கான
உரிமை அல்லது விருப்பம் சிறைவாசிகளுக்கு உண்டு
என்பது தெளிவாகிறது. குற்றவாளிகள் அல்லது சிறை
வாசிகள் ஆகியோரின் குழந்தை பெற்றுக்கொள்ளும்
உரிமையைப் பறிப்பது சரியல்ல என்று கூறியுள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டம் 21ன்படி ஒருவர் குழந்தை
பெற்றுக்கொள்வது அடிப்படை உரிமை என்றுகூறுகிறது.
எனவே, ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்திலும்
வாழ்க்கையிலும் யாரும் தலையிடக்கூடாது. இதை
அரசியல் அமைப்பு உறுதிசெய்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத்
தொடங்கியுள்ளதுடன் வலைத்தளங்களிலும் வைரலாகி
வருகிறது.