யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீஸார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கோவை, சென்னை உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்து விட்டார்.
இதனிடையே, தனது மீது பதிவு செய்யப்பட்ட 15 வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சவுக்கு சங்கர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட ஒரு வழக்கு தவிர, மற்ற அனைத்து வழக்குகளையும் கோவை சைபர் கிரைம் காவல்துறைக்கு மாற்றி, உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்