15.09.2026; நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்… இன்றைய விலை இதோ!!

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 12-ந்தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கும் விற்பனையானது. 13-ந்தேதியும் இதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும், ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும் விற்பனையானது. இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் சரிந்துள்ளது.

சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும், ஒரு கிராம் ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இதனிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.

ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News