தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் பெண்களுக்கு நிதி அளிக்கும் திட்டமானது மகாராஷ்டிராவில் லட்கி பஹின் யோஜனா என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. லட்கி பஹின் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்களைக் கொண்ட பெண்கள் மாதந்தோறும் ரூ.1,500 பெறுகிறார்கள்
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு மிகப்பெரிய மோசடி ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகாராஷ்டிராவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (WCD) நடத்திய தணிக்கையில், லட்கி பஹின் யோஜனாவின் கீழ் 14,000 க்கும் மேற்பட்ட ஆண்கள் உட்பட 26 லட்சம் போலி பயனர்கள் நிதி சலுகைகளைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநில கருவூலத்திற்கு ரூ.21.44 கோடி இழப்பு ஏற்பட்டது.
“லட்கி பஹின் திட்டம் ஏழைப் பெண்களுக்கு உதவுவதற்காகத் தொடங்கப்பட்டது. ஆண்கள் அதன் பயனாளிகளாக இருப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை நாங்கள் திரும்பப் பெறுவோம். அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால், மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் எச்சரித்துள்ளார்.