Thursday, July 31, 2025

தலித் சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 13 பேர் கைது 

ஆந்திரப்பிரதேசத்தில் 15 வயது தளித் பெண்ணை 2 ஆண்டுகளாக கூட்டமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூன் 9 ஆம் தேதி சிறுமி கொடுத்த புகாரின் பெயரில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் முக்கிய குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார்.

சிறுமியை தவறாக படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டியது தெரிய வந்துள்ளது. தற்போது அந்த சிறுமி 8 மாத கர்ப்பிணி ஆன நிலையில் அனந்தபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொடூரமான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் குற்றவாளிகளை விரைவில் நீதிமன்றம் முன் நிறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News