Thursday, December 26, 2024

ஒரே செடியில் 1,269 தக்காளிப் பழம்

ஒரே செடியில் 1,269 தக்காளிப் பழங்கள் காய்த்தது
அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் நகரைச்
சேர்ந்த டக்ளஸ் ஸ்மித் இந்த கின்னஸ் சாதனையை
நிகழ்த்தியுள்ளார்.

உலகிலேயே சிறந்த தக்காளி விவசாய முறைகளைக்
கண்டறிய விரும்பினார் டக்ளஸ். அதற்காக விவசாய
முறைகளைப் பகுப்பாய்வு செய்யத் தொடங்கினார்.
மேலும், பல்வேறு அறிவியல் ஆவணங்களைப் படித்தார்.
அத்துடன் மண் பரிசோதனைகளையும் மேற்கொண்டார்.

பின்னர், தனது தோட்டத்தில் மாதிரி முறையில் பசுமைக்
குடில் அமைத்து அதில் செர்ரி ரகத்தைச் சேர்ந்த தக்காளிச்
செடிகளைப் பயிரிட்டார். ஒவ்வொரு முறையும் அவருக்குப்
புதுவிதமான அனுபவம் கிடைத்தது.

ஒருமுறை ஒரு செடியில் 121 தக்காளிப் பழங்கள் காய்த்தன.
மற்றொரு முறை 869 தக்காளிப் பழங்கள் காய்த்தன. அப்போது
கின்னஸ் சாதனையானது இந்த விளைச்சல். 2021 ஆம் ஆண்டில்
ஒரே செடியில் 1,269 தக்காளிப் பழங்கள் காய்த்தன. இதன்மூலம்
தனது முந்தைய கின்னஸ் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

இந்தச் செடியைப் பராமரிப்பதற்காக வாரத்துக்கு 4 மணி நேரம்
மட்டுமே செலவிட்டுள்ளார் டக்ளஸ்- செர்ரி என்னும் ரகத்தைச்
சேர்ந்த இந்தத் தக்காளிப் பழம் மிகுந்த சுவையும் சத்தும் நிறைந்ததாகக்
கருதப்படுகிறது.

Latest news