இந்தோனேசியாவில் 8 கோடி குழந்தைகளுக்கு உணவு வழங்குவதை இலக்காக கொண்டு, இலவச உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மையத்தில் சமைக்கப்பட்ட உணவு, அங்குள்ள பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
கடந்த 3 நாட்களில் மட்டும் 1,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மேற்கு ஜாவா, சுலவேசி ஆகிய மாகாணங்களில் கடந்த வாரம் 800 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இச்சம்பவங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.