சென்னை அமைந்தகரையில் உள்ள வெள்ளாளர் தெருவில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி திறந்து கிடந்துள்ளது. அப்போது அங்கு வந்த 12 வயது சிறுவன், எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடையில் விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் சாக்கடையினுள் விழுந்த சிறுவனை உயிருடன் மீட்டனர். இதில் சிறுவனின் கை மற்றும் இடது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.
தூய்மை பணியின் போது போதிய எச்சரிக்கை பலகை வைக்காமல் ஊழியர்கள் பணியாற்றதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.