ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மகேஷ் நகரில் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை கழிவு நீர் வடிகாலில் திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த 12 மாணவர்கள் மயங்கியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, மூச்சு விடுவதில் சிரமம், தாங்க முடியாத தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பதிலளிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் மாணவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.