Thursday, December 25, 2025

அரசு பேருந்துகள் மோதியதில் 11 பேர் பலி – பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே நேற்று அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிரமதர் மோடி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சிவகங்கையில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயரத்தில் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதி மூலம் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News