சென்னையை அடுத்த மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் மேற்பார்வையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் சென்னை புறநகர் பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் மொத்தம் 258 வாகனங்கள் சோதனை செய்யப்பட்ட நிலையில், 105 வாகனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிக பாரம் ஏற்றி சென்றது, அதிவேகமாக வாகனங்களை இயக்கியது, ஆவணங்களை புதுப்பிக்காமல் இருந்த வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் ஆவணங்கள் இல்லாத 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.