அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அதன் பிறகு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியை அறிவித்தார்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அதேவேளை, மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் அமைத்திருந்தால் அந்த நிறுவனங்களுக்கு இந்த வரி பொருந்தாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப்பின் இந்த அறிவிப்பால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.