Sunday, December 7, 2025

சென்னையில் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து

விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. இதனால் கடந்த 5 நாட்களாக கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 100- இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கடும் பாதிப்பு அடைந்தனர். வேறு விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை 5 மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News