Wednesday, February 18, 2026

தமிழ்நாட்டில் 9 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

பாளையங்கோட்டை, ஈரோட்டில் 103 டிகிரியும், திருச்சியில் 102 டிகிரியும், சென்னை மீனம்பாக்கம், கரூர் பரமத்தி, திருத்தணி 101 டிகிரியும், கடலூர் பரங்கிப்பேட்டை, தஞ்சாவூரில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

Related News

Latest News