Wednesday, February 5, 2025

10 குடும்பத்துக்குத் தேவையான ஒரே தக்காளிப் பழம்

பெட்ரோல் விலையோடு போட்டிபோட்டு ஜெயித்துவிட்ட தக்காளிப் பழம் கடந்த சில நாட்களாக இல்லத்தரசிகளை மகிழ்ச்சிகொள்ளச் செய்கிறது. ஒரு கிலோ தக்காளிப் பழம் 1 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 10 ரூபாய்க்குள் விற்கப்படுகிறது.

இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய தக்காளிப் பழம் ஒன்று இல்லத்தரசிகளைக் கவர்ந்து வருகிறது.

அமெரிக்காவின் டான் சதர்லேண்ட் பகுதியில் விளைந்துள்ள இந்தத் தக்காளிப் பழம் சுமார் 5 கிலோ எடையுள்ளது. துல்லியமாகச் சொல்ல வேண்டுமானால் 4 கிலோ, 896 கிராம் எடை.
இதனை கிரேட் பூசணி காமன்வெல்த் அமைப்பு அங்கீகரித்துள்ளது.

டொமிங்கோ ரகத்தைச் சேர்ந்த இந்தத் தக்காளிப் பழம் கொழுப்பு நிறைந்தது. இனிப்பாக இருக்கும் இந்தத் தக்காளிப் பழம் மாட்டிறைச்சி போன்ற சுவை கொண்டது. சேன்ட்விச் செய்வதற்கு மிகவும் ஏற்றது.

இந்த டோமிங்கோ தக்காளிப் பழம் இத்தாலியைச் சேர்ந்த வின்சென்சோ டொமிங்கோ என்ற விவசாயியின் பெயரால் அழைக்கப்படுகிறது.

Latest news