2025 ஆம் ஆண்டில் விண்வெளியில் செயலில் உள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. தற்போது பூமியை சுற்றி சுமார் 12,952 செயற்கைக்கோள்கள் பறக்கின்றன.இந்த ஆண்டில் மட்டும் சுமார் 145 புதிய செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகமானவை அமெரிக்காவுக்கு சொந்தமானவை.
அதிக செயற்கைகோள்கள் உள்ள top 10 நாடுகள் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் அமெரிக்கா 8,530 செயற்கைக்கோள்களுடன் முன்னணியில் உள்ளது. NASA, பாதுகாப்புத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக SpaceX-ன் Starlink திட்டம் 7,400க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது, இது உலகளாவிய இணைய சேவையை வழங்குகிறது.
இரண்டாவது இடத்தில் ரஷ்யா 1,559 செயற்கைக்கோள்களுடன் உள்ளது. ரஷ்யா 2036 வரை இதனை 2,600 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ரஷ்யா GLONASS வழிசெலுத்தல் அமைப்பை விரிவுபடுத்தி, அமெரிக்காவின் GPS-க்கு போட்டியாக்க முயற்சித்து வருகிறது.
மூன்றாவது சீனா 906 செயற்கைக்கோள்களுடன் உள்ளது. சீனாவின் Guowang திட்டம் Starlink-க்கு போட்டியாகும் பட்சத்தில் செயல்பட்டு வருகிறது.
நான்காவது இடத்தில் யுனைடெட் கிங்டம் 763 செயற்கைக்கோள்களுடன் இராணுவ, அறிவியல் மற்றும் தொடர்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.
ஐந்தாவது ஜப்பான் 203 செயற்கைக்கோள்களுடன் முக்கியமாக வழிசெலுத்தல் மற்றும் ஆராய்ச்சி பணிகளில் உள்ளது.
ஆறாவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. இராணுவ உளவுத்துறை, பூமி கண்காணிப்பு மற்றும் விண்வெளி பாதுகாப்பு செயல் விளக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் அங்கு உள்ளன.
ஏழாவது இந்தியா 136 செயற்கைக்கோள்களுடன் உள்ளது. இந்தியா அடுத்த 3 ஆண்டுகளில் 100-150 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. 2025 ஜனவரியில் இஸ்ரோ 100வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏற்றியது.
எட்டாவது இடத்தில் ஜெர்மனி 82 செயற்கைக்கோள்களுடன் உள்ளது. ஜெர்மனி தற்போது Starlink போன்ற செயற்கைக்கோள் குழுமங்களை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.மேலும் எதிரி நாடுகளின் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு வசதிக்காக புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்த விரைவாக முயற்சித்து வருகிறது.
ஒன்பதாவது இடத்தில் இத்தாலி 66 செயற்கைக்கோள்களுடன் இருக்கிறது. இத்தாலி தனது விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொடர்பு தேவைகளுக்கு இந்த செயற்கைக்கோள்களை பயன்படுத்தி வருகிறது.
பத்தாவது இடத்தில் கனடா 64 செயற்கைக்கோள்களுடன் உள்ளது. கனடா வானியல், தொடர்பு மற்றும் பாதுகாப்பு துறைகளில் செயற்கைக்கோள்களை விரிவாக பயன்படுத்தி வருகிறது.