1 ரூபாய்க்கு வாங்கப்பட்ட மிகவும் அரிதான சூப்பர்மேன் காமிக் புத்தகம் 19 கோடி ரூபாய்க்கு ஏலம்போன தகவல் சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.
எழுத்தாளர் ஜெர்ரி சீகல் மற்றும் கலைஞர் ஜோ ஷஸ்டர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் சூப்பர் ஹீரோவின் முன்னோடியாகும். இந்தக் கற்பனையான கதாபாத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட சூப்பர்மேன் என்ற காமிக் இதழ் அதிகமான விலைக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
1938 ஆம் ஆண்டு இந்தக் காமிக் இதழை எழுதி 1939 ஆம் ஆண்டு விற்பனைக்கு அனுப்பினர்.
புத்தக விற்பனை நிலையத்தில் இந்தக் காமிக் புத்தகம் பிரதி ஒன்றின் விலை 1 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டது. அப்போது அதன் பிரதிகள் 3. 25 டாலர் தொகைக்கு விற்பனையானது. ஆனால், தற்போது ஒரே ஒரு பிரதி மட்டும் ஆன்லைன் ஏலம் மூலம் 2.6 மில்லியன் டாலர் தொகைக்கு விற்பனையாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில்தான் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.