06.10.2026; மீண்டும் குறைந்தது தங்கம் விலை!! இன்றைய விலை நிலவரம் இதோ…

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கமாக காணப்படுகிறது. செப்டம்பர் 29-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,09,120-க்கு விற்பனையான நிலையில், 30-ந்தேதி ரூ.560 உயர்ந்து ரூ.1,09,680-ஆனது.

அக்டோபர் 1-ந்தேதி ரூ.240 குறைந்து ரூ.1,09,440-க்கும், 2-ந்தேதி ரூ.760 உயர்ந்து ரூ.1,10,200-க்கும் விற்பனையானது. பின்னர் 3-ந்தேதி ரூ.800 குறைந்து ரூ.1,09,400-ஆக இருந்தது. 4-ந்தேதியும், நேற்றும் விலையில் மாற்றம் இல்லாமல் இதே விலையே நீடித்தது.

இந்நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் ரூ.1,09,280-க்கும், ஒரு கிராம் ரூ.13,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேபோல், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News