சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.
குறிப்பாக, சில நாட்களில் ஒரே நாளில் இரண்டு முறை கூட தங்கத்தின் விலை மாற்றம் கண்டது. கடந்த 3-ந்தேதி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,700-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,09,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு 4-ந்தேதி தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையே நீடித்தது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.13,560-க்கு விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த நுகர்வோர் மற்றும் நகை வாங்குபவர்களுக்கு இந்த விலை சரிவு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று வரை ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனையான நிலையில், இன்று ஏற்பட்ட இந்த விலை குறைவு வெள்ளி வாங்குபவர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
