National Family Health Survey நடத்தியுள்ள ஆய்வில் இந்தியாவில் உள்ள 89% குழந்தைகளுக்கு 6 முதல் 23 மாதங்கள் வரை ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைப்பதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வின் படி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு அளிப்பதில் மேகாலயா மாநிலம் முதலிடத்திலும் உத்தரபிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளது.
குழந்தைகளின் ஆரம்ப காலத்தில் சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதால் வலுவற்ற எலும்புகள், மூளை செயல்பாட்டில் குறைபாடு மற்றும் இயல்பான ஆரோக்கியத்தில் தொய்வு ஏற்படுவதாக கூறும் மருத்துவர்கள்…,
![](https://sathiyam.tv/wp-content/uploads/2022/05/child-1.jpg)
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி குழந்தைகளுக்கு தானியங்கள், பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள், பால் பொருட்கள், முட்டை, மீன் மற்றும் இறைச்சி அடங்கிய சரிவிகித உணவை அளித்தால் மட்டுமே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க முடியும் என கருத்து தெரிவிக்கின்றனர்.