வலிப்பு வந்தால் கையில் இரும்பை கொடுக்கும் மூடநம்பிக்கையை நம்பவேண்டாம்!

68
Advertisement

வலிப்பு நோய் ஏற்ப்பட்டவர்களுக்கு இரும்பை கையில் கொடுத்தால் வலிப்பு நின்றுவிடும் என்று  நம்பி கையில் இரும்பு பொருட்களை கொடுப்பார்கள் அவை பயனளிக்குமா அல்லது மூடநம்பிக்கையா என்னும் கேள்விக்கு பதிலளிக்கும் காணொளி காட்சியாக இது அமையும்.

வலிப்பு வந்தவர்களுக்கு இரும்பை கொடுக்கவேண்டும் எனக்கூறி கத்தி போன்ற பொருட்களை கொடுத்துவிடுகிறார்கள் அதன்முலம் வலிப்புவந்தவர்கல் குத்திக்கொள்கிறார்கள் இறுதியில் ஆபத்தில்தான் முடிகிறது.

வலிப்பு , மூளையின் ஒரு பக்கத்திலேயோ அல்லது முழுவதிலும் திடீரென தோன்றுகிற எலெக்ட்ரிக்கல் டிஸ்சார்ஜால் வலிப்பு உண்டாகிறது.சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் வலிப்பு பாதிக்கும்.கை மற்றும் கால் இழுத்து வாயில் நுரைதள்ளி வருவதுதான் வலிப்பு என்று மக்கள் நம்புகிறார்கள்,திடீரென கண் சிமிட்டுவது. முகம் சுளித்து இழுப்பது, முறைத்து பார்த்து கொண்டே இருப்பதும் வலிப்பின் அறிகுறிகள்தான்.

Advertisement

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதை இனி பார்க்கலாம் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் , தூக்கமின்மை இந்த வலிப்பு நோய்க்கு மிகப் பெரிய விரோதி,பழக்கவழக்கங்கள் முக்கியம். மது அருந்துதல், புகைப் பிடித்தல் போன்றவையும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.

வலிப்பு வராமல் இருக்க இந்த உணவை தவிர்க்க வேண்டும் என்று இ ஏதும் இல்லை ஆனால் சிறுவர்களுக்கு ஒரு நாளிற்கு பத்து முறை வலிப்பு வருவதாக இருந்தால், மூளை சேதமடைந்து கொண்டே இருக்கும். எனவே, அவர்களுக்கு மிக குறைவான கார்போஹைட்ரேட் , கொழுப்பு அதிகமுள்ள உணவு உள்ள உணவை கொடுக்க வேண்டும்.