ரஷ்ய வீரர்களை விரட்டி வீட்டின் கதவை சாத்திய வயதான தம்பதி

479
Advertisement

உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை தொடக்கி மூன்று வாரங்கள் மேல் ஆகிவிட்டது. முக்கிய பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள நிலையில் இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தையில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட்டு போர் திருத்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்த்து மக்கள் காத்துகொண்டு உள்ளனர்.

இந்நிலையில் , உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் வெளியேற ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்து உள்ளது. இந்த போரில் குடும்பங்கள் சிதறின… மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர் போன்ற மனதை உடைக்கும் தருணங்கள் காணொளியாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தற்போது பகிரப்பட்ட வீடியோ ஒன்றில் , வீட்டில் நுழைந்த ரஷ்ய படை வீரர்களை வீட்டை விட்டு விரட்டி கதவை சாத்தும் வயதான தம்பதியர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வயதான தம்பதிகளின் தைரியத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவை உக்ரைனில் உள்ள அமெரிக்கா தூதரகம் தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .