‘புஷ்பா பாடலுக்கு நடனம்’- தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

297
Advertisement

“புஷ்பா” படப்பாடலின் தாக்கம் உலகமெங்கும் எதிர்ரொலித்தது.உள்ளூர் முதல் உலகப்பிரபலம் வரை இப்படத்தின் பாடலுக்கு நடனம் ,படத்தில் வரும் கதாநாயகனின் செய்கைகளை செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்வது வழக்கமாகி விட்டது.

இந்நிலையில் , ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பள்ள ஒன்றில் ‘புஷ்பா’ பாடலுக்கு வகுப்பறையில் சில மாணவர்கள் நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து,தலைமை ஆசிரியை பணியிடை செய்யப்பட்டுள்ளார்.

ஷெரகடா பிளாக்கில் உள்ள பாரமுண்டலி உயர்நிலைப் பள்ளியின் ஸ்மார்ட் வகுப்பறையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு குறித்து சில குறிப்புகளை வழங்கிவிட்டு ஆசிரியர் அந்த அறையை பூட்டாமல் வெளியேறிவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் அந்த அறையில் இருந்த சில மாணவர்கள் தங்கள் மொபைல் போன்களுடன் டிவியை இணைத்து, ‘ஸ்ரீவல்லி’ பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.