உக்ரைனில் போருக்கு நடுவே வயலின் வாசித்த பெண்

293
Advertisement

பிப்ரவரி 24 ஆம் தேதிமுதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் ஒரு பெண் வயலின் வாசித்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யா தாக்கத் தொடங்கிய பிறகு, தலைநகர் உள்பட நகர்ப்புறங்களிலிருந்து கார், ரயில் போன்ற வாகனங்கள் மூலம் உக்ரைன் மக்கள் பாதுகாப்பான இடம்தேடிப் பயணித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், ஒரு பெண் வயலினில் இந்தியப் பாடலை வாசிக்கும் வீடியோ ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோ போருக்கு சிறிது காலத்துக்கு முந்தி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கீவ் நகரிலுள்ள தெருக்களின் அமைதியான மற்றும் கலகலப்பான சூழலை சித்தரிப்பதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.

Advertisement

அதனைப் பார்க்கும் பலரின் உள்ளம் உருகுகிறது. இவ்வளவு அமைதியான பகுதியா இப்போது போரை எதிர்கொள்கிறது என வியப்போடு அந்தக் காட்சிகளைப் பார்க்கின்றனர்.

இரத்தக் களரியை நிறுத்துங்கள். உக்ரைனை உலகின் சிறந்த இடமாக மாற்றுங்கள் எனப் பதிவிட்டு வருகின்றனர் அனைத்துத் தரப்பு மக்களும்.