சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி, 2021ம் ஆண்டு வரை விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. ஒன் டவுனில் இறங்கி CSKவை தனி ஒருவனாக,எக்கச்சக்க முறைகள் கரை சேர்த்திருக்கிறார். ஒரு சிறிய பால்கனி சம்பவம்’ இவரது IPL வாழ்க்கையை முடித்து வைத்து விட்டது.
தற்போது IPL வர்ணனையாளராக இருக்கும் ரெய்னா, முதன்முறையாக சென்னை அணி குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர், ” பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகத்தின் பார்வையில் சொல்வது என்றால், இந்த ஆண்டு IPL ஏலம் சென்னைக்கு கைகொடுக்கவில்லை.
ஏலத்தில் பிரியன்ஷ் ஆர்யா உள்ளிட்ட திறமையான, இளம்வீரர்கள் ஏராளமாக இருந்தனர். ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் போன்ற, மூத்த வீரர்களையும் நீங்கள் தவறவிட்டு விட்டீர்கள். மற்ற அணிகளில் அடித்து ஆடுகிறார்கள்.
சென்னை இதுபோல தடுமாறி இதற்கு முன் நான் பார்த்ததில்லை,” என்று விமர்சனம் செய்துள்ளார். இதேபோல மற்றொரு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ”CSK அணிக்காக ஆடும் வீரர்களில் ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர்கள் என்று, யாரையும் நான் பார்க்கவில்லை. சென்னை அணிக்கான வீரர்களை தேர்வு செய்த குழுவினர், எந்த அடிப்படையில் வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர் என்னும் விவரத்தை, அணி நிர்வாகத்திடம் வழங்கினார்களா?, என கேள்வி எழுகிறது,” என்று காட்டமாக பேசியிருக்கிறா