அவசரப்பட்டு ஐபோன் 13 வாங்கிடாதீங்க

318
Advertisement

இன்னும் ஒரு சில வாரங்களில் ஆப்பிளின் அடுத்த மாடல் மொபைலான ஆப்பிள் ஐபோன் 14 வெளியாக உள்ள நிலையில் ,  ஆப்பிள் 13 , ஆப்பிள் 11 மற்றும் ஆப்பிள் SE ஆகிய மாடல்கள் தற்போது ஆன்லைன் வர்த்தக தளங்களில் விலை குறைந்துள்ளன.  எனவே வாடிக்கையாளர்களும் இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து அவற்றை வாங்கி வருகின்றனர். ஆனால் நிபுணர்களின் கருத்துப்படி ஐபோன் 13இன் விலையை விட ஐபோன்14 பேசிக் மாடலின் விலை குறைவாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல் ஐபோன் 13இன் அடுத்த நிலை என்பதால் அதை விட ஒரு சில மாறுபாடுகள் செய்தே விற்பனைக்கு வரும். ஆனாலும் இதன் விலை அதை விட குறைவாகவே இருக்கும் என்று நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அதனால் அவசரப்பட்டு யாரும் ஆப்பிள் ஐபோன் 13 மாடல் மொபைல்களை வாங்க வேண்டாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.