முதல்வர் ஸ்டாலினை  கலங்க  வைத்த  கலைஞரின் ஓவியம்

265
Advertisement

அரசுமுறை பயணமாக தலைநகர் டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலிக்குக்கு விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது . டெல்லி வாழ்  தமிழ் மக்கள், விமான நிலையத்தில்  முதல்வரை பூக்கள் தூவி வரவேற்றனர்.

பின் , பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழக அரசு சார்பாக பல்வேறு கோரிக்கை முன் வைத்தார் முதல்வர் ஸ்டாலின். அத்துடன் டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பாஜக அலுவலகம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவிற்கு அழைப்புவிடுத்தார்.

அதைத்தொடந்து டெல்லி முதல்வரை சந்தித்த முதல்வரை மு.க ஸ்டாலின் ,அங்குள்ள அரசு பள்ளியை நேரில் பார்வையிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் , “டெல்லி அரசு பள்ளியை பார்வையிட்டபோது , மாணவர்களின்  திறன்களை ஊக்குவிக்கும் முன்னெடுப்பை கண்டு மகிழ்ந்ததாக தெரிவித்த அவர் ,

மாணவர்களும் , ஆசிரியர்களும்  தங்களது அன்பால் என்னை நினைய செய்துவிட்டனர்.தலைவர் கலைஞரின் ஓவியத்தை ஆசிரியை ஒருவர் வழங்கியபோது , நெகிழ்ந்தேன் என தெரிவித்தார்.

டெல்லிவாழ் தமிழ் மக்கள்  அன்பில் நினைந்த முதல்வரை, கலங்க செய்தது டெல்லி  ஆசிரியையின் கலைஞரின் ஓவியம்.   

: