மாணவியுடன் சேர்ந்து நடனமாடிய அரசுப்பள்ளி ஆசிரியை

518
Advertisement

கடந்த சில நாட்களாகவே , பள்ளி மாணவ மாணவிகளை விமர்சிக்கும் விதம் சில வீடியோகள் இணையத்தில் உலா வருகிறது.ஆசிரியர்களை மாணவன் அச்சுறுத்துவது , மாணவிகள் பள்ளியில் மது அருந்துவது , பள்ளியில் மாணவிகள் மடியில் மாணவர்கள் படுத்திருப்பது போன்ற வீடியோகள் இணையத்தில் வைராக்கி வருகிறது.

மாணவர்களுக்கு இணையாக பள்ளி மாணவிகளும் தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் இது போன்ற சில அனாரிக்க செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு மனிதன் தன் வாழ்வில் எந்த உயரத்திற்கு சென்றாலும் அந்த பெருமை ஆசிரியர்களுக்கே சேரும்.அதுபோன்ற ஆசிரியர்களை அச்சுறுத்தும் மாணவர்கள் ஒருபுறம் இருந்தாலும், ஆசிரியர்கள் மாணவர்கள் இடையேயான நல்லுறவை உணர்த்தும் வீடியோக்களும் அவ்வபோது இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தற்போது அதுபோன்ற ஒன்று வீடியோ இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.அதில் டெல்லி அரசுப்பள்ளி அரிசியை ஒருவர் மாணவி உடன் பகுப்பறையில் நடனமாடி மாணவிகளை உற்சாகப்படுத்துகிறார்.

ஆங்கில ஆசிரியர் ஒருவர் பள்ளி நேரம் முடியும் தருணத்தில் வகுப்பறையில் மாணவி ஒருவரை பாடலுக்கு நடனமாட வைக்கிறார்.அந்த பள்ளி சிறுமி நடனமாட மற்ற மாணவிகள் ஆசிரியை மாணவியுடன் இணைந்து நடனமாட வேண்டும் என குரல் எழுப்புகின்றனர்.

தன் குழந்தைகளை போல மாணவிகளை பார்க்கும் அந்த ஆசிரியை ,அவர்களை ஏமாற்றாமல் நடனம் ஆடும் மாணவியின் நடன அசைவுகளை தானும் செய்து அந்த சிறுமியுடன் நடனம் ஆடுகிறார் தங்கள் ஆசிரியை நடனமாடுவதை பார்க்கும் மாணவிகள் மகிழ்ச்சியுடன் அவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

ஒரு மனிதரின் வாழ்வில் ஆசிரியரின் பங்கு , கண்ணிற்கு தெரியாத “கடவுளாகவும் ” , கண்ணுக்கு தெரியும் ” கடவுளாகவும் ” இருக்க வேண்டும்.இதனை மாணவ மாணவிகளும் உணரவேண்டும்.