இருமல் என்று கூறியவரின் தொண்டையில் அட்டைப் பூச்சிகள்…

415
Advertisement

இருமல் என்று கூறியவரின் தொண்டையிலிருந்து 2 அட்டைப் பூச்சிகள் அகற்றப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது-
சீனாவில் ஒரு மனிதனின் காதில் இருந்து கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் அகற்றியது நினைவிருக்கிறதா? இதேபோன்ற அனுபவம் அந்நாட்டில் அண்மையில் நிகழ்ந்துள்ளது.


காடுகளுக்குச் சென்று வேலை செய்யும் சீனர் ஒருவர் தனது உடலில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் 2 மாதங்களாக இடைவிடாமல் இருமிக்கொண்டிருந்தார். நீடித்த இருமல் காரணமாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்தபோது இருமலுடன் ரத்தம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது- பின்னர், வேறொரு மருத்துவமனையில் சுவாசப் பிரிவு மருத்துவரிடம் சென்று காண்பித்தபோது சிடிஸ்கேன் எடுத்துப் பார்த்துள்ளனர் அதில் எந்த அறிகுறியும் தெரியவில்லை. பின்னர், ப்ரோன்கோஸ் கோபி செய்ய மருத்துவர்கள் முடிவுசெய்தனர்.


அதில் நாசியிலும் தொண்டையிலும் அட்டைப் பூச்சிகள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மயக்க மருந்து செலுத்தப்பட்டு இடுக்கி மூலம் அந்த அட்டைப் பூச்சிகள் வெளியே எடுக்கப்பட்டன. அப்போது அவையிரண்டும் உயிருடன் இருந்தன.


இதுபற்றிக் கூறியுள்ள அந்த மருத்துவர் மலை நீரோடைகளில் இருந்து தண்ணீர் குடித்தபோது அதன்மூலம் அட்டைப் பூச்சிகள் தொண்டைக்குள் புகுந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். நோயாளியின் ரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்துள்ளன என்று அந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்குமுன்பு நிகழ்ந்த இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.