கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி முட்டை என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு.
கடந்த 1 ம் தேதி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் தமிழகத்திற்கு நிதி எதுவும் ஒதுக்கப்படாததால் தமிழகத்தை புறக்கணித்ததாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று நாகர்கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுக உடன் கூட்டணியிலுள்ள பாஜக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழகத்திற்கு வழங்கிய நிதி முட்டை என ஒரு முட்டை படத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பட்ஜெட் 2026 தமிழக மக்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த போஸ்டர் அவர்களின் எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தி உள்ளது.
