கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் மின்னணு ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் துவக்க விழா நடைபெற்றது. இதில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது யூடியூப் செய்தி சேனல்களுக்கு லைசென்ஸ் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும் என மின்னணு ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்ற சித்தராமையா, தொலைக்காட்சி சேனல்களை போலவே யூடியூப் செய்தி சேனல்களும் அரசிடம் இருந்து லைசென்ஸ் பெற்றே செயல்பட அனுமதிக்கும் முறையை கொண்டுவர அரசு பரிசீலனை செய்யும் என கூறினார். கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு என சாடினார்.
