Wednesday, April 2, 2025

மது போதையில் பட்டா கத்தியுடன் வீட்டை சூறையாடிய இளைஞர்கள்

திருப்பூரில் மது போதையில் பட்டா கத்தியுடன் உரிமையாளர் வீட்டை சூறையாடிய இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சேகர், 4 வீடுகள் கொண்ட வரிசை குடியிருப்புகளை வைத்துள்ளார். இவர் முதல் இரண்டு வீடுகளில் தனது குடும்பத்துடன் தங்கி வரும் நிலையில், மீதமுள்ள இரண்டு வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அருகாமையில் வாடகைக்கு குடியிருந்த 2 இளைஞர்களுக்கு உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டின் உரிமையாளர் சேகரின் வீட்டை அலேக்ஸ் மற்றும் சக்திவேல் ஆகிய இளைஞர்கள் பட்டா கத்தியுடன் சூறையாடினர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுகுறித்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

Latest news