வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் அருகேயுள்ள முள்ளிப்பாளையம் நியாயவிலைக்கடை பக்கத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மிகப்பெரிய குடிநீர் டேங்க் கட்டப்பட்டு அதில் தண்ணீரும் நிரப்பப்பட்டு குடிநீர் விநியோகம் நடக்கிறது.
இதில் 4 இளைஞர்கள் சுமார் 50 அடிக்கு மேல் உயரமுள்ள இந்த பெரிய குடிநீர் தொட்டியின் மீது அத்துமீறி ஏறி சுமார் 2மணிநேரத்திற்கும் மேலாக இளைஞர்கள் ஒவ்வொருவராக ரீல்ஸ் எடுத்தனர்.
அந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்ப உள்ளது. மக்கள் உயிருக்கும் ஆபத்தும் இளைஞர்களுக்கும் ஆபத்து. இவைகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.