அரியலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருமானூர் கொள்ளிடம் ஆற்றங்கரை நீரேற்றும் நிலையம் அருகில் கடந்த 29ஆம் தேதி, கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞரை அரியலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் கைது செய்தனர்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இவர் மீது பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதால் நவீன்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.