Tuesday, December 23, 2025

இளமையாக இருக்க வாரம் ஒரு முறை இந்த கிழங்க சாப்பிடுங்க போதும்!

சாதாரணமாக நம் ஊரில் கிடைக்கும் சக்கரைவள்ளிக் கிழங்கிற்குள் ஒளிந்திருக்கும் இத்தனை நன்மைகளை பற்றி தெரிந்தால், அடுத்த முறை வேண்டாம் என சொல்லாமல் பலரும் சாப்பிடுவார்கள்.

A, B, C விட்டமின்கள், ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்த சக்கரவள்ளிகிழங்கு உடலின் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

சக்கரைவள்ளி கிழங்கில் உள்ள Folate அமிலம், பெண்களுக்கு கரு விரைவில் உருவாவதற்கு உறுதுணையாக செயல்படுகிறது. வயிற்றில் உள்ள அல்சர் குணமாக சக்கரை வள்ளி கிழங்கு காரணமாக அமைகிறது. இளமையாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் விருப்பம்.

உடலில் உள்ள செல்கள் பாதிப்படைந்து அழிவதாலேயே முதுமையான தோற்றம் ஏற்படுகிறது. சக்கரை கிழங்கை அவ்வப்போது உணவில் சேர்த்து கொள்வதால் செல்கள் பாதிக்கப்படும் வேகம் குறைந்து இளமையான தோற்றம் சாத்தியமாகிறது. சக்கரைவள்ளி கிழங்கில் நிறைந்துள்ள நார்ச்சத்து அஜீரண கோளாறுகளை சரி செய்து சீரான நச்சு வெளியேற்றத்தை உறுதி செய்கிறது.

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறுவதால், சருமம் இயல்பான பொலிவுடன் விளங்கும் என கூறும் இயற்கை மருத்துவர்கள், நன்மைகள் பல தரும் சக்கரைவள்ளி கிழங்கை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

Related News

Latest News