திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கோசுகுறிச்சி – கம்பிளியம்பட்டியில் வசிப்பவரான பழனிச்சாமி, ரைஸ்மில் பணி செய்துவந்தார். அவருடைய மகன் சூர்யா (27) தந்தைக்கு உதவியாய் அந்த ரைஸ்மில்லில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கம்பிளியம்பட்டி அருகே கருநாச்சிகுளம் பகுதியில் இன்று அதிகாலை சூர்யாவின் தலையில் கல்லை போட்டு ரத்தம் தெறித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை ஏன் நடந்தது, எப்போது நடந்தது, எதற்காக நடந்தது என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
