Thursday, July 31, 2025

பூந்தமல்லியில் வாகனங்களை கல்லால் சேதப்படுத்திய வாலிபர்

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லியை கடக்கும் வாகனங்களை வாலிபர் ஒருவர் கல்லால் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்தடுத்து மூன்று கார் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை கற்கலைக் கொண்டு எரிந்து உடைத்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து அந்த வாலிபரை காவல்துறையினர் துரத்திச் சென்று பிடிக்க முயன்றனர்.

நீண்ட போராட்டத்திற்கு பின்பு பொதுமக்களின் உதவியுடன் காவல் துறையினர் வாலிபரை பிடித்து கைகளை கட்டி போட்டனர்.வீணையில் பிடிபட்ட வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

பிடிபட்ட நபர் போதை ஆசாமியா அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவரா என தொடர்ந்து பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News