தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், குஜராத்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் SIRக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் காங்கிரஸ் இளைஞரணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
