Tuesday, February 24, 2026

இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் கைது : மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையின்றி போராடிய விவகாரத்தில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தநிலையில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைதுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

காங்கிரஸ், அதன் இளம் தலைவர்களை மிரட்ட பாஜக முயற்சி செய்கிறது. நாட்டின் சூழல் மோசமடைந்துள்ளது. பிரதமர் மோடி நாட்டையே அழித்துவிட்டார். காங்கிரஸ், அதன் இளம் தலைவர்களை மிரட்ட பாஜக முயற்சி செய்கிறது. காங்கிரசிடையே பயத்தை விதைக்க வேலை செய்கின்றனர். காங்கிரஸ் கோழைத்தனமானது அல்ல. என அதில் பதிவிட்டுள்ளார்.

Related News

Latest News