விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள தேவதானம் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் காவலராக பணியாற்றி வந்த சங்கர பாண்டியன் (54) மற்றும் பேச்சிமுத்து (60) ஆகியோர் சில நாட்களுக்கு முன் இரவில் மர்ம நபர்களால் வெட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இதற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (25) கைது செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், முனியசாமி (35) என்பவரும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது, முனியசாமி திடீரென தப்பி ஓட முயன்றபோது பாலத்தில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கை, காலில் முறிவுகள் ஏற்பட்டன. போலீசார் உடனடியாக அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
